Skip to content

ஒரு அப்பாவின் யுத்த‌ம்

புது ஃப்ளாட்,உள் அல‌ங்கார‌ம்,
ம‌ர‌ வேலைக‌ள்,
மார்பிள் த‌ரை
என‌ பெருமையோடு காட்டி 
சிரித்த‌ப‌டி
உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான்
ந‌ண்ப‌ன்..

த‌வ‌ழ்ந்து வ‌ந்த‌ இரண்டாவ‌து
குழ‌ந்தையை
பார்த்த‌ப‌டி கேட்டான்
“த‌ங்க‌ம் ஏண்டா இப்ப‌டி
வெலையேறுது ”

அடுத்த நீண்ட‌
யுத்த‌த்திற்கான‌
அலுப்புட‌ன்.

Published inக‌விதை

3 Comments

  1. அன்பின் டோடோ

    பெண்ணைப் பெற்ற அப்பாக்கள் படும் பாடு – என்ன செய்வது – ஒவ்வொன்றாக அனைத்துச் செயல்களையும் செய்யத்தான் வேண்டும் – அடுத்த யுத்தம் ……

    நல்வாழ்த்துகள் டோடொ
    நட்புடன் சீனா

  2. இந்த ஒரு காரணத்திற்காகவே , வரதட்சணை பிரச்சினை ஒழிந்து , வேலைக்கு போகும் பெண்களுக்கு நல்ல வரண்களாக காதல் திருமணம் நடந்து, அட்லீஸ்ட் புதிய தலைமுறையாவது , “நகை, நகை” என்று ஆசை படுவது தவிர்த்தல் சரி ..

  3. ராஜ‌ன், சீனா.. வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி. நீங்க‌ சொன்ன‌து ரொம்ப‌ ச‌ரியான‌துங்க‌.

Leave a Reply to Toto Cancel reply

%d bloggers like this: