விடுமுறைக்கு நகரத்திலிருந்து
வந்த சிறுவனிடம்
மாநகரத்தில் வளர்ந்த
சிறுமி கேட்டாள்
உனக்கு யுனோ விளையாடத் தெரியல
பெளலிங் தெரியல
செக்கர்ஸ் தெரியல
ஸ்விம்மிங் தெரியல
என்ன தான் தெரியும் உனக்கு
என்று சலித்தபடி
கேட்டாள்
ஒரு பக்கமாக தரையில்
கை வச்சு பல்டியடிப்பேன்
என்று ஹாலில்
3 பல்டி அடித்துக் காட்டி
சிரித்தான்
இது மாதிரி பல்டி அடிக்கத்
தெரியாத
மாநகரச்சிறுமி
அழ ஆரம்பித்தாள்
பிரமாதம். எவ்வளவு விஷயங்கள பொதிந்து கிடக்கின்றன!
உண்மைத்தான்…. கவிதை அருமை.
மாதவராஜ், கருணாகரசு.. வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப நன்றி..
ரொம்ப நல்லா இருக்குங்க..
நெறைய யோசிக்க வைக்குது இது ..
என்னோட வருத்தம், இந்த மாதிரி T .V , கார்ட்டூன் சேனல்கள், வீடியோ கேம்ஸ் போன்ற பாதிப்புகளால், கிராம சிறுவர்களும், கொஞ்சம் கொஞ்சமா கிராமங்களுக்கே தனித்துவமான physical activities , out door கேம்ஸ் neglect பண்ணிட்டு , டிவி/வீடியோ கேம்ஸ் மட்டுமே பாக்கற தலைமுறயகிட கூடாதுங்கறது தான்…
அநேகமா இந்த ‘காலத்தில’, நெறைய வீட்ல நடக்கும்…இந்த inspiration ல நேத்து ஒரு பிரபல பதிவர் ஒரு சின்ன பதிவு போட்ருந்தார் னு நெனைக்கிறேன்…
நன்றி ராஜன்..