மூன்று மாதத்திற்கொரு முறை
நிகழ்ந்துவிடும்
செட்டிக்குளத்தில் சிறுவர்கள்
மூழ்கி காணாமல் போய்விடுவது
மைக் அண்ணன் மட்டுமே
குளத்திலிறங்கி மூழ்கியெடுப்பார்
சில சமயம் அவர்களாகவும்
பல சமயம் அவைகளாகவும்
பள்ளிவாசலில் 4 மணிக்கு
அவர்களின் மவுத் அறிவிப்பு**
வந்துவிடும்
பின்னாளில் சிறுவர்கள்
குளத்தில் மூழ்கிவிடுவதில்லை
மைக் அண்ணனின்
மவுத் அறிவிப்பு வந்த பிறகா
அல்லது
குளம் வற்றிய பிறகா
என்று நிச்சயமாக
சொல்ல முடியவில்லை.
** – மவுத் அறிவுப்பு : இஸ்லாமியர் ஒருவரின் இறப்பை பள்ளிவாசல் மூலமாக ஊருக்குத் தெரியப்படுத்துதல்.
வேதனை