நான்கு பக்கத்திலும்
மரச்சட்டம் அடித்த
ஸ்லேட்டில் எழுதப் பிடிக்காமல்,
பலப்பம் மென்று
ஸ்லேட்டை உடைத்து
பிற்காலத்தில் படிப்பை
நிறுத்திய சிங்காரம்
வளர்ந்து பொன்வண்டு சோப்
விளம்பர பனியன் அணிந்து
பிளாஸ்டிக்கில் மூடிய
பல வண்ண ஸ்லேட்டுகளில்
தினமும்
எழுதிகொண்டிருக்கிறான்
உருளை ரூ.12
வெங்காயம் ரூ.15
பீன்ஸ் ரூ.20.
அருமையா சொல்லிட்டீங்க..
adhaiyum thappillamal yezhudhinaa saree..
Nalla irukku