புற்றில் பாம்பு வந்ததை,
வண்டிச்சக்கரம் கட்டு கட்டுவதை,
கரும்பு லாரி பள்ளத்தில் சிக்கியதை,
காடா விளக்கொளியில் போர்வை/புடவை
ஏலம் போடப்படுவதை,
ராஜீவ் காந்தி வந்த ஹெலிகாப்டரை,
பசை தடவி போஸ்டர் ஒட்டுவதை,
மீன்கடையில் நடக்கும் சண்டையை,
புல்டோசர் மண் அள்ளுவதை,
அம்மன் ஊர்வலத்திற்கு
ஜோடனை செய்வதை,
வியந்து வேடிக்கை
பார்க்கும்
டீக்கடையில் ஒருவர் ‘தந்தி’ படிக்க
சுற்றியமர்ந்து சில பேர்
கேட்கும்
இடைவேளை விளம்பர ஸ்லைடில்
ரஜினியோ எம்.ஜி.ஆரோ வந்தால்
விசிலடிக்கும்
தேருக்கும் கார்த்திகை தீபத்திற்கும்
பக்தியோடு சுத்திவரும்
மனிதர்கள் நிறைந்த
ஒரு சாதாரண தமிழ்நாட்டு
டவுன் தான்
என் சொந்த ஊர்.
இது என் 100வது கவிதை. “காதல்” என்ற வார்த்தையில்லாமல், பெண்ணைப் பற்றியில்லாமல் எழுதித்தான் பார்ப்போமே என்று ஆரம்பித்தது [ பெரிய அம்பிகாபதி இவரு..:) ]. பின் தொடரும் நண்பர்களுக்கும், எழுத ஊக்கமளித்து வரும் வெங்கட், கிருஷ்ணா, ராஜன், கதிர், இர்ஷாத், ஸ்ரீகாந்த், டேவிட், கணேஷ் கோபாலசுப்ரமணியன், பா.ரா. ஸார், சைவகொத்துபரோட்டா, கனிமொழி, செந்தில், ஆறுமுகம், மாரிமுத்து, நேசமித்ரன், இராகவன், ஷங்கர், ஸ்ரீ, சீதா பாரதி மற்றும் முகுந்த் நாகராஜன் ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
100 வது கவிதைக்கு வாழ்த்துகள்
அருமையான கவிதைகள் சோடை போகாத சொல்முறை
வாழ்த்துகள்
நல்லா அடிச்சு ஆடுங்க 😉
adhu yenga voor saar…
Naanga already ‘patent” potrukkum la..
yepdi yengalai kekkaama yenga voorai , kann munna kondu varalam, neenga???
வெக்க படாம, ஒரு 20 -30 கவிதைகளை தேர்ந்து எடுத்து( ராஜாராம் சார், நே.மி சார்,கிருஷ்ணா தேர்வுக்குழு ), பிரிண்ட் அவுட் எடுத்து, கிழக்கு பத்ரிக்கு அனுப்பி வைங்க, உங்க ப்ளாக் லிங்க் குடுங்க..உங்க கவிதைகள்ல ரொம்ப நல்ல”nativity ” இருக்கு …, கிராமிய மனமும் , மிடில் கிளாஸ் மனசும் மிக்ஸ் ஆகி படிக்கறவங்கள,” ஆமாம்ல்ல”ன்னு தலையாட்ட வெய்க்குது..
நேசமித்ரன், கனிமொழி, கணேஷ், ராஜன்.. ரொம்ப நன்றிங்க. ராஜன்.. அப்போ நம்மளும் தொழிலதிபரா !!
என்ன அதோட விட்டுடீங்க?
நிலக் கிழார் , நிலாச் சுவான்தரர்- அப்டின்னும் போடனும்க…
அப்படின்னா நீங்க நம்ம ஊரா?!
ஆமாங்க முத்துவேல் :). நன்றி