துணி துவைத்து முடித்த
அம்மாவின் உள்ளங்கை
குழந்தைகளை குளிக்கவைத்த
பாட்டியின் உள்ளங்கை
அருவியிலிருந்து வெளியே
வந்தபோது பார்த்த எங்கள்
உள்ளங்கை
மழையிலும் ஓட்டிய
ரிக்ஷாக்கரரின்
உள்ளங்கை
இப்படி ஈர்த்துப்போன
உள்ளங்கைகள்
பலவகையிருந்தாலும்
மறப்பதற்கில்லை
ஐஸ்வண்டிக்காரரின்
வண்ணமயமாக
ஈர்த்துப்போன
கை விரல்களை.
ஈரக்கை
Published inகவிதை
Be First to Comment