வாலாட்டி வந்த நாயிடம்,
கையைப் பிடித்த பெற்றவரிடம்,
விசும்பும் மனைவியிடம்,
காலைக் கட்டிய குழந்தையிடம்,
ரயில் நிலைய
ப்ளாட்பாரத்தில்
அணைத்த நண்பனிடம்
சொல்லிவிட்டு
வண்டியேறினேன்.
திரும்ப வர நாளாகும்
என்பதை
எப்படிச் சொல்வேன்
ஜன்னலில் துரத்தி
கூடவே வரும்
என் சொந்த ஊர்
கையைப் பிடித்த பெற்றவரிடம்,
விசும்பும் மனைவியிடம்,
காலைக் கட்டிய குழந்தையிடம்,
ரயில் நிலைய
ப்ளாட்பாரத்தில்
அணைத்த நண்பனிடம்
சொல்லிவிட்டு
வண்டியேறினேன்.
திரும்ப வர நாளாகும்
என்பதை
எப்படிச் சொல்வேன்
ஜன்னலில் துரத்தி
கூடவே வரும்
என் சொந்த ஊர்
நிலவிடம்.
விடாது நிலவு – விட்டு விலகாது காத தூரம் போனாலும்