செகண்ட் ஷோ/ஷிஃப்ட் முடித்து
பயமில்லாமல் வரலாம்
விடிகாலை ஊருக்கு வந்து
யோசிக்காமல் வரலாம்
எந்த துரத்தலும் இல்லாமல்
பைக்கில் வேகமாகப் போகலாம்
ஓடும் குழந்தைகளை பின்தொடர்ந்து
நிதானமாக சோறூட்டலாம்
சுத்தம், குடும்பங்கள், குழந்தைகள்,
மரங்கள், அமைதி, தண்ணீர்
இவற்றை மிஞ்சி
வீட்டின் உரிமையாளர் கூட
சொல்லாத ஒரு விஷயம்
26 பி மெயின் தெருவில்
ஒரு தெரு நாய் கூட
இல்லாதது !
i could relate what u r coming to, when i read the 3rd point, because i am used to such chases by street dogs!