Skip to content

அப்பா முக‌ம்

ம‌ருத்துவ‌ம‌னையில் பார்த்த‌
அப்பா முக‌ம் ஞாப‌க‌த்தில்
இருப்ப‌தில்லை..


வ‌ண்டி நின்ற‌ ஊர்ப்பெய‌ர்
ச‌ரியாக‌ சொல்லும்,
கோலி சோடாவின்
ச‌ரியான‌ ப‌க்கத்தைக் காட்டும்,
எங்க‌ள் ரிக்ஷாவை விட‌
வேக‌மாக‌ ந‌ட‌க்கும்,
சொன்ன‌ ஊருக்கெல்லாம்
மாற்ற‌லில் போகும்,
மாநில‌ச் செய்திக‌ள் ம‌ட்டும்
கேட்கும்,

வாட‌கை வீட்டிலும்
வ‌ண்ண‌மாக‌ வாழ்ந்த‌
சிறுவ‌ய‌து அப்பா முக‌ம்
ஆழ‌ப்ப‌திந்தே இருக்கிற‌து..


தார்ச்சாலையில் ப‌திந்த‌
நெல்ம‌ணிக‌ளைப்போல‌.

Published inக‌விதை

3 Comments

  1. ந‌ன்றி சைவா

  2. I think the current generation of city kids may not really experience the “Goli soda” , Radio News and to some extent Rickshaw. may i say this one is in the class of Narsim!very good , keep it up!

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: