மழை பெய்த நாளில்
ரயில் பாதையருகே
சிவப்பு சட்டையில் ஒரு
சிறுவனைப் பார்த்தேன்..
ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில்
கொட்டும் மழையில்
சிவப்பு சட்டை காட்டி
ஓடும் ரயிலைக் காப்பாற்றிய
வளவனாக இருக்குமோயென
யோசித்தேன்..
இருக்காது..அவன் இந்நேரம்
வளர்ந்து வேலைக்குப்
போயிருப்பான் என்று
சிரித்துக்கொண்டேன்
நீங்க தப்பா எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்களுடைய வலைத்தளத்தில் back ground color ரொம்ப darkஆ இருக்கறதனால உங்களுடைய எழுத்துக்களை படிக்கிறதுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கறது.so Please ஒன்னு எழுத்துக்களின் நிறத்தையோ அல்லது back ground color யோ கொஞ்சம் மாத்தினீங்கனா படிக்கிறதுக்கு எளிதாக இருக்கும்.நீங்க வேனா உஙக நன்பர்கள் கிட்ட கேட்டுப்பாருங்களேன்.
நன்றி சிவக்குமார். கொஞ்சம் மாற்றி இருக்கேன், பார்த்துவிட்டு சொல்லவும்.