வீட்டுப் பாடத் தொல்லையில்லாமல்
கோடை விடுமுறையிலிருந்த
குழந்தைகள் அலையில்
குதித்துக்கொண்டிருந்தன..
குடும்பஸ்தர்கள்
மக்கிய மற்றும் மக்காத
கவலைகளை
கடலில் கொட்டிக்கொண்டிருந்தனர்..
ஜோடியாக வந்த பெண்
காதலிப்பதைக் காட்டிலும்
காதலிக்கப்படுவதை பெருமையாக
காட்டிக்கொண்டு நடந்தாள்..
எதையும் கவனிக்காமலேயே
அலைகள்
திரும்ப திரும்ப
வந்துகொண்டிருந்தன..
திங்கள்கிழமைகளைப் போல்.
//எதையும் கவனிக்காமலேயே அலைகள்
திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன..
திங்கள்கிழமைகளைப் போல்.//
ரொம்ப நல்லா இருக்குங்க இந்த வரிகள்…
நன்றி
வெங்கட்,
திருமபதிரும்ப என்றுதான் இருக்கவேண்டும்.
திரும்பத்திரும்ப என்று இருக்கக்கூடாது.
திரும்பதிரும்ப என்பது அடுக்குத்தொடர்.
அடுக்குத்தொடரில் வலிமிகாது அண்ணாச்சி.
நன்றி வெங்கட்.. நன்றி ஜோ.. மாத்திட்டேன்.
3rd para was classic.