தும்பி போல
லேசாக, துடிப்பாக
பறந்து கொண்டிருந்தேன்,
வாடகை வீட்டு
காலங்களில்..
ஆசைப்பட்டு இடம் வாங்கி
கடன்பட்டு அதில் வீடும் கட்டி
மாதத் தவணையில்
மொத்த கவனமும் குவிந்து
மெதுவாக.
ஊர்ந்துகொண்டிருக்கும் போது
புரிந்தது
தன் வீட்டைத் தானே
சுமக்கும்
நத்தையின்
நகர்தலைப் பற்றி !
Be First to Comment