மத்திய வயது
பெண்கள் இருவர்
இறகுப்பந்து ஆடிக்கொண்டிருந்தனர்,
பூங்காவில்..
“பந்து வெள்ள தான்
விழுந்துது.. நான் பாத்தேன்.
காட் ப்ராமிஸ், மதர் ப்ராமிஸ்”
அழுவது போலவே சொன்னார்
அதில் ஒருவர்.
அடர் பச்சை யுனிஃபார்ம் பாவாடையும்,
பஃப் வைத்த மேல் சட்டையும்,
மடித்து கட்டிய
ரெட்டை ஜடையும்,
வெள்ளை ரிப்பனுமாக
ஒரு சிறுமி தான் அங்கு
தெரிந்தாள்
பையில்
ஜியாமெட்ரி பாக்ஸும்,
நெல்லிக்காயும்
வைத்திருப்பாளோ
என்னவோ !
Be First to Comment