Skip to content

ஓய்வுக்குப் பிற‌கு

குட்டையான‌ உருவ‌மும்
உள்ப‌க்க‌ம் க‌ட்டிய‌ வாட்சும்
எரிக்கும் பார்வையும்
ச‌வுக்கு குச்சியுமாக‌
வெளுத்து வாங்கிய‌
அல‌மேலு டீச்சர்

த‌ள‌ர்வாக‌வும்
த‌னியாக‌வும் போன‌போது
ந‌ல‌ம் விசாரித்தேன்

ஓய்வுக்குப் பிற‌கு
த‌ன‌க்கு வ‌ந்த
ந‌ல‌க் குறைவு
ப‌ல‌ரின் சாப‌மாக‌யிருக்க‌லாம்
என்றார்

ப‌ள்ளிக்கூட‌த்துல‌
பொம்ப‌ள‌ப்பிள்ளைக‌ளை
க‌ண்டிச்சுப் பாதுகாப்பா
பாத்துகிட்டேன் ; அது
த‌ப்பா என்று கேட்டார்

ப‌தில் தெரியாத‌தால்
வேறு தெருவில்
த‌னியே வ‌சிக்கும்
ஒரே ம‌க‌னின் குடும்ப‌ம்
ப‌ற்றிக் கேட்டு
பேச்சை மாற்றினேன்.

Published inக‌விதை

3 Comments

  1. சைவா, ஸ்ரீ .. ரொம்ப‌ ந‌ன்றி.

%d bloggers like this: