வேலைக்கு எழுதிபோட்ட
இடைவெளியில் சில பேர்
தாலுக்காபீஸ் வாசலில்
கடைபோட சில பேர்
எதையாவது செய்ய வேண்டிய
கட்டாயத்திற்கு சில பேர்
பெண்களைப் பார்த்து மட்டும்
போக சில பேர்
அவர்களின் காலமும், கனவும்
சுற்றும் ரிப்பனிலும்,
சுருட்டிய பழுப்புக் காகிதத்திலும்,
ஆடும் வளையல் சத்ததிலும்,
கேரேஜ் பாரின் மணியோசையிலும்,
தவறுகள் சுழித்த சிவப்பு மையிலுமாக
கரைந்து கொண்டிருந்தன
ஜன்னல் கம்பியில்
பக்கவாட்டில் மெதுவாக
நகரும் மழைத்துளியைப் போல.
//ஜன்னல் கம்பியில் பக்கவாட்டில் மெதுவாக நகரும் மழைத்துளியைப் போல//
நல்ல கவிதைங்க…நன்றி….
நன்றி வெங்கட்
u have the uncanny knack of bringing alive the small town existence in the early 90’s…