சட்டையின் உள்ஜோபி போல்,
பள்ளிக்கு ரிக்ஷாவில் போனது போல்,
தங்க நாணலுக்குள்
செருகிய செப்புக்குழாய் போல்,
நாயில்லாத சாலையில்
போவதைப் போல்,
பாதுகாப்பாக உணர்ந்த
தருணங்கள்..
அப்பாவே மொத்தக் குடும்பத்தையும்
பார்த்துக்கொள்ள
நட்பும், சிரிப்பும்,
ஃபுட்போர்ட் பயணங்களும்
நல்ல சினிமாவுமாய்ப்
போன நேரங்கள்.
நல்ல கவிதைங்க…
பொருப்பு அப்பாகிட்ட இருக்குறப்போ நாம என்ன செய்யுறது…
ம்ம்ம்…….உண்மைதான்.
பாலாசி, சைவா.. நன்றி