Skip to content

ஒத்துப்போகாத‌ க‌ட‌வுள்க‌ள் (or) Clash of the Titans

பெரிய‌ க‌ட‌வுளைக்காண‌
திட்ட‌மிட்டு, காத்திருந்து,
செல‌வு செய்து,
பெரிய‌ வ‌ரிசையில் நின்ற‌பின்
கையில் வைத்திருந்த‌
சின்ன‌க் க‌ட‌வுள்
நிறுத்தாம‌ல் வீறிட்ட‌து

வெட்க‌ம் பார்க்காம‌ல்
வ‌ரிசையில் வ‌ந்த‌ வ‌ழியிலேயே
வ‌ழி கேட்டு

வெளியேறிய‌து ஒரு குடும்ப‌ம்

குள‌த்த‌ருகே காற்றாட‌
வ‌ந்த‌வுட‌ன்
கோபுர‌த்தின் சீரிய‌ல் லைட்டைப்
பார்த்து சிரித்துக்கொண்டிருந்த‌து
சின்ன‌க் க‌ட‌வுள்.

Published inக‌விதை

2 Comments

  1. ந‌ன்றி க‌னிமொழி

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: