இடது பக்கம் கைக்குட்டை வைக்க,
வலது பக்கம் பர்ஸ் வைக்க,
அதிக பணத்தை
டிக் பாக்கட்டில் வைக்க,
கை வைத்த பனியன் போட,
சிவாஜி, கமல், சுஜாதா ரசிக்க,
துப்பறியாத வாரப் பத்திரிகை படிக்க,
முகச்சவரம் செய்து அதன் பின்
படிகாரம் போட்டுக்கொள்ள,
கூட்டமில்லாத கடையில் துணியெடுக்க,
இஸ்திரி பண்ண,
சுத்தமாக இருக்க,
குழந்தைகளைக் கொஞ்ச,
எல்லாம் பார்த்தே கற்றுக்கொண்டேன்
அப்பாவிடம்,
ஒன்றைத் தவிர..
இருப்பதைக் கொண்டு
திருப்தியாக வாழ.
உண்மை கவிதை வரிகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள்
அந்த கடைசி மேட்டர் மறந்ததன் பலனையே, பல ஆசிரமங்கள் பயன் படுத்துகின்றன.
// இருப்பதைக் கொண்டு
திருப்தியாக வாழ. //
கலக்கலல் வரிகள். முந்தைய தலைமுறையிடம் நாம் கற்றுக் கொள்ள மறந்த விஷயம்.
கடைசி வரிகள் அருமை.
Touching ….
மதுரை சரவணன்,சைவா,இராகவன்,ஸ்ரீ,கனிமொழி : வந்ததற்கும், ரசித்ததற்கும் ரொம்ப நன்றி.
பாராவின் வழி உங்களை அடைந்தேன் !
மிகுந்த மகிழ்ச்சி ! பொறாமையுடன் வாழ்த்துகள் …. கவிதைக்கான மனோநிலை அற்புதமாய் வாய்க்கப் பெற்றிருக்கிறீர்கள்
அன்பின் ராஜன் ராதாமணாளன்
அருமை…சொல்ல வந்த கருத்தையும் அப்பாவையும்
ரசித்தேன்
ராஜன், சீதா .. வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப நன்றி.