Skip to content

வெளிநாட்டிலிருந்து

வெளிநாட்டிலிருந்தோ
வெளியூரிலிருந்தோ
வீட்டிலுள்ள‌வ‌ர்க‌ளோடு
பேசும்போது

அவர்க‌ளின்
குரலையும் மீறி,
ஒரு முனையில் தெரியும்
க‌வ‌லைக‌ள்
ம‌று முனையில் ஏற்ப‌டுத்தும்
திவ‌லைக‌ள்.

ஈர‌ விற‌கில்,
ஒரு முனையில் எரியும்
நெருப்பு,
ம‌று முனையில்
பூக்க‌ வைக்கும்
நீர்த்துளிக‌ளைப் போல்.

Published inக‌விதை

5 Comments

  1. // ஈர‌ விற‌கில்,
    ஒரு முனையில் எரியும்
    நெருப்பு,
    ம‌று முனையில்
    பூக்க‌ வைக்கும்
    நீர்த்துளிக‌ளைப் போல்//

    வாவ் அருமையான உதாரணம்…

    ரொம்ப நாள் ஆச்சு… விறகு எரிவதைப் பார்த்து.. படிக்கும் காலத்தில் பார்த்தது… குமிழ் குமிழாக வரும்… அதுவும் சவுக்கு விறகில் பார்க்க அழகாக இருக்கும்.

  2. நல்ல உவமை.பாராட்டுகள்.

  3. இராக‌வ‌ன், சைவா, க‌னிமொழி, ஸ்ரீ : ரொம்ப‌ ந‌ன்றிங்க‌..

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: