வரும்போது குடுங்கனு சொல்ல
செருப்பு டோக்கன்காரரில்லை
தட்டு வாங்கிக்கயணானு சொல்ல
பூக்காரியில்லை
கரித்துண்டுக் கல்வெட்டோடு
பாழடைந்த நூறுகால் மண்டபமில்லை
நீலப் பெயிண்ட்டில், ஆதிகாலத்தில்
எனத் தொடங்கும்
ஸ்தல வரலாறில்லை
கத்தினால் எதிரொலிக்கும்,
வவ்வால் பறக்கும்
பிரகாரமில்லை
அடிக்கும் வெய்யிலில்
இருட்டாகத் தெரியும்
கருவறையில்லை
பத்து ரூபாய் சிறப்பு வழி
வரிசையுமில்லை
மின்விளக்கிலும், மின்விசிறியிலும்
உபயதாரர் பெயரில்லை
துர்க்கைக்கு கவிழ்த்து வைத்த
எலுமிச்சை விளக்கில்லை
கொடிமரத்தருகே சுற்றும்
மாடும் நாயுமில்லை
கோடு போட்ட ஜமக்காளம் விரித்து
சுற்றமும் நட்பும் சூழ யாரும்
சோறு சாப்பிடவில்லை
தட்டில் போட்ட நோட்டைக்கூட
உண்டியலில் போட்டு
அமைதியாகப் போகிறார்
அந்தவூர் அர்ச்சகர்
என்ன கோயிலோ
என்ன நிர்வாகமோ.
நல்ல ரசனை, உங்களுக்கு.
ஸ்ரீ, கனிமொழி : வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி முரளி.