தேன்மிட்டாய்,கமர்கட்,
மாங்கா பத்தை,புளியந்துளிர்,
கல்லுப்பு,
கொடுக்காப்புளி,தூள்பாக்கு,
மோர்மிளகா,
சுண்டைக்காய்
அறுசுவையோடு தின்று
அவர் சைக்கிளில் சுற்றி
ஆகாசவாணியில் செய்தி
வாசித்த சரோஜ் நாராயண்ஸ்வாமி
ஆண்தான் என்று நினைத்து
ப்ருஸ்லீக்கும் ஃபேந்தமிற்கும்
சண்டை வந்தால்
யார் ஜெயிப்பாரென்று
பந்தயம்கட்டி
பதினோரு மணிக்கு
மீன் வாங்கப் போகும்
அம்மாவைப் போல்..
சாவகசமாகத்
திரிந்த
நேரங்கள் அவை.
Memories
nostalgia
Wings ….
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
ஏகப்பட்ட நினைவுகள் இருக்கு போல :))
நல்லா இருக்கு.:-))))
நேசமித்ரன், மதுரை சரவணன், சைவா, ஸ்ரீ : வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றிங்க.