வீட்டுப்பாடம் செய்யாதது,
பரீட்சைக்குப் படிக்காதது,
கிராஃப் பேப்பர்
வாங்க மறந்தது,
கோனார் நோட்ஸ்
தொலைந்துபோனது,
ப்ராக்ரஸ் கார்டு
கையெழுத்து வாங்காதது
எல்லாம் ஞாபகம்
வர ஆரம்பிக்கும்..
“செய்திக்குப்பின்
திரைப்படம் தொடரும்”
என்ற அறிவிப்பு வரும்,
கறிசோறு செரித்து
ஞாயிற்றுக்கிழமை
முடியும்
தருவாயில்.
மாம்ஸ் எப்படி? மறந்து போன பல நினைவுகளை வார்த்தைகளில் புகைபடமாய்…அசந்து போய்ட்டேன்…படித்ததும் அம்மாவை தொலைபேசியில் அழைத்து படித்து காட்டினேன்…”என்னடா உன் கத மாதிரியே இருக்கு..பழைய நண்பன் யார்டையாவது பேசிகிட்டு இருந்தியா?” அப்படின்னு கேட்டாங்க..
கலக்கல் நண்பா.
செந்தில், சைவா : ரொம்ப நன்றி.
செந்தில்.. நம்ம எல்லோருக்கும் இதெல்லாம் ரொம்ப பொதுவானது தானே !
அருமை.
Wow… Superb Toto…
ஸ்ரீ, கனிமொழி : வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப நன்றிங்க.