வகுப்பு மேஜையில்
போட்ட தாளம்
பூவரசயிலையில்
செய்த ஊதல்
விடிகாலை பள்ளிவாசல்
தொழுகைக்கான அழைப்பு
ஆ..ஒரிக்கிலோப்பத்தேய்
என்று காய்கறிக்கடை
மனோகர் சொல்வது
இது மாதிரியான
சிறு வயது
ஒலிக்குறிப்புகள்
பாதி நகத்தில்
மீதியிருக்கும்
மருதாணி வண்ணம்போல்
ஞாபகத்தில்
இருக்கிறது.
//பாதி நகத்தில் மீதியிருக்கும் மருதாணி வண்ணம்போல் ஞாபகத்தில் இருக்கிறது.//
பின்னீட்டீங்க… உவமானம் ரொம்ப நல்லா இருக்குங்க..
அட்டகாசம்
//பாதி நகத்தில்
மீதியிருக்கும்
மருதாணி வண்ணம்போல்//
Superbbb
வெங்கட்.. அந்த கடைசி வரிகள் தான் கவிதை.. மிச்சமெல்லாம் ஜோடனை தான் :).
பத்மா, கனிமொழி.. ரொம்ப நன்றிங்க.
ஆ..ஒரிக்கிலோப்பத்தேய்///
just loved this.
நல்லா இருக்குங்க… you bring out those yesteryear slides very well.
விதூஷ், கிருஷ்ணா : வாசிப்பிற்கு ரொம்ப நன்றி.