பால் நிறத்தில்
ஆரஞ்சு நிறத்தில்
பச்சை, சிவப்பு நிறத்தில்
இப்படி
எந்த நிறத்தில் கேட்டாலும்
‘ஐஸ்’ குமார் அண்ணன்
“பெட்டி ! தம்பி சொல்ற கலர்
குடு” என்று கை விட்டு
ஐஸ் எடுத்து தருவார்,
சைக்கிளின் பின்னே
வைத்த அதிசய
சதுரப் பெட்டியிலிருந்து
“வண்டியைப் பாத்துக்கடா”
என்று ஒப்படைத்த ஓர் நாளில்
ஆசையாக பெட்டியில்
எட்டிப் பார்த்தேன்
அதில்
வெட்டிய வானவில்
துண்டங்கள் கிடந்தன,
உறைந்து.
ஆரஞ்சு நிறத்தில்
பச்சை, சிவப்பு நிறத்தில்
இப்படி
எந்த நிறத்தில் கேட்டாலும்
‘ஐஸ்’ குமார் அண்ணன்
“பெட்டி ! தம்பி சொல்ற கலர்
குடு” என்று கை விட்டு
ஐஸ் எடுத்து தருவார்,
சைக்கிளின் பின்னே
வைத்த அதிசய
சதுரப் பெட்டியிலிருந்து
“வண்டியைப் பாத்துக்கடா”
என்று ஒப்படைத்த ஓர் நாளில்
ஆசையாக பெட்டியில்
எட்டிப் பார்த்தேன்
அதில்
வெட்டிய வானவில்
துண்டங்கள் கிடந்தன,
உறைந்து.
Be First to Comment