Skip to content

அப்பாடா..என்ன‌ வெயில் !

த‌ர்பூச‌ணி,
ச‌ட்டைக்கு ப‌ட்ட‌ன் போடாத‌
ஓட்டுன‌ர்க‌ள்,
பாறை தெரியும் கிண‌று,
தாரில் நெகிழ்ந்த‌
ம‌ஞ்ச‌ள் கோடுக‌ள்,
ம‌ஞ்சில்லா வெளி,
ம‌ண‌ல் ஆறுக‌ள்,
மொட்டைமாடியில்
தெளிக்க்க‌ப்ப‌டும் நீர்..

 எல்லாவ‌ற்றை விட‌
“போன‌ வ‌ருஷ‌த்தைவிட‌
இந்த‌ வ‌ருஷ‌ம்” வ‌ச‌ன‌ம்,

இப்ப‌டியாக‌
கோட‌ங்கி சொல்லாம‌ல்
வ‌ந்த‌து கோடை.

Published inக‌விதை

5 Comments

  1. I’m sorry boss… I didn’t get this line..
    //ம‌ஞ்சில்லா வெளி //
    Could u pls tell me wat it is…
    Here or else in mail…
    :-(

    Except that the poem is good… :-)

  2. சைவா, க‌ட‌வுள் [!], க‌னிமொழி ‍; வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப‌ ந‌ன்றி.

    ம‌ஞ்சு ‍: மேக‌ம், வெளி : ஆகாய‌ம்.. மேக‌மில்லாத‌ ஆகாய‌ம்.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: