சித்ரா ஸ்டோர்சில்
மந்தாரயிலை வாங்கி
தையிலை செய்வாள்
அடாவடி பேரம்
அமர்க்களமாய்ச் செய்வாள்
மூன்று மணிக்கெழுந்து
பம்ப்பில் நீர்பிடிப்பாள்
என் காலில் பதிந்த
ஸ்கேல் தடத்திற்காக
சரஸ்வதி மிஸ்ஸை
மிரட்டியிருக்கிறாள்
படிக்கலைன்னா என்னக் கேளு
என்று சண்டை போட்டு
ஒன்றிலிருந்து மூன்றாம்
வகுப்பிற்கு மாற்றினாள்
லஷ்மியோ, முரளிகிருஷ்ணாவோ
எல்லா மேட்னிக்கும்
கூட்டிப்போனாள்
தைரியசாலி அம்மாதான்
தனியாய்த் தவிப்பாள்..
சாலையைக் கடக்க,
எஸ்கலேட்டரில் ஏற.
ஹாஹா அருமை.
நன்றி வெங்கட்.
very emotional…nallairruku.
very true – nicely expressed
Krishna, Seetha : Thank you so much.