சொத்துக் கண்காட்சியிலேயே
அடுக்குமாடி குடியிருப்புகளை
உடனுக்குடன்
முன்பதிவு
செய்துவிடுகிறார்களாம்.
வங்கியுதவியும் அங்கேயே
கிடைக்கிறதாம்..
இதற்கு மேலும்
தள்ளிப்போட முடியாது..
நாளை நீ என்ன செய்தாயெனக்
குழந்தை கேட்கக்கூடும்..
அடுத்த வருடம்
எப்படியிருக்குமோ
சொல்ல முடியாது..
அவர்கள்
தீவுத்திடலை வாங்கிவிடுவதற்குள்
குழந்தையோடு
போய் வரவேண்டும்,
சுற்றுலாப் பொருட்காட்சிக்கு.
கிளம்பிற வேண்டியதுதான்.
//லேசான புன்னகையோ, பலத்த சிரிப்பையோ, அட ஆமாம்ல என்று சின்ன ஆச்சரியத்தையோ ஏற்படுத்த முடிந்தால் சந்தோஷம்// ..நீங்க ரொம்பவே சந்தோஷப்பட்டுக்கலாம்
சைவா, கதிரவன் : வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப நன்றிங்க.
நன்றி செந்தில்
arumai..