பல ஜோடிக்கால்களும்,
சில்க் ஹவுஸ் துணிப்பைகளும்,
காக்கி, வெள்ளை
சீருடைகளும்,
புழுதியுமாய் ஒரு
கலவரம் நடக்கும்
சம்பளம் சரியாகக்
கிடைக்காத கோபத்தை
அமைப்பாளர் மரத்தில்
ஒடித்த குச்சியில்
காட்டிடுவார்
அடிவாங்கியும்
சிரிப்புடன் ஓடி வருவார்கள்
செவிக்குணவில்லாத
இடைவேளையில்
ஈயப்பட்ட சத்துணவுடன்
கிடைத்த
முட்டையோடு.
சத்தான முட்டைதான்.
//செவிக்குணவில்லாத
இடைவேளையில்//
ரசித்தேன்..
நன்றி செந்தில், சைவா.