Skip to content

ச‌ற்று முன்

எந்த‌ப் ப‌ள்ளி வேனும்
ப‌ள்ள‌த்தில் க‌விழ‌வில்லை

எந்த‌ லீலை சாமியாரும்
சிக்க‌வில்லை

எந்த‌ ந‌டிக‌ரும் ச‌வால்
விட‌வில்லை

ப‌ந்த்தில்லை, க‌ல‌வ‌ர‌மில்லை,
துப்பாக்கிச்சூடில்லை,

அட‌.. ஒரு ம‌த‌யானை கூட‌
மார்க்கெட்டில் யாரையும்
மிதிக்க‌வில்லை

இதெல்லாம் ஒரு
த‌லைப்புச்செய்தி !!

ச‌ரி..காத்திருப்போம்.
ச‌ற்று முன் கிடைக்க‌ப்போகும்
திடுக்கிடும்
த‌க‌வ‌லுக்காவ‌து..

Published inக‌விதை

3 Comments

  1. Yes all of us are suffering from this disorder…

  2. உண்மை வெங்க‌ட்..
    க‌னிமொழி.. ஆமாம் ! கார்ல்ட‌ன் ட‌வ‌ர் ச‌ம்ப‌வ‌ம் வ‌ருத்த‌மான‌து.. எழுதின‌து மீடியா த‌ரும் த‌வ‌றான‌ முக்கிய‌த்துவ‌த்திற்கு.

%d bloggers like this: