சங்கர் பைனான்ஸ்
என்று தலைகீழ்
முக்கோணத்தில் எழுதிய
சைக்கிளில் வரும்
அண்ணனிடம் தண்டல்காசு
தர முடியாத காரணத்தை
நாடா நிக்கர் போட்ட
நாங்களே சொல்லிவிடுவோம்
அவர் தலை மறைந்ததும்
அம்மாக்களோடு
ஓடுவோம்,
பேர் போடுவதற்கு முன்
படம் பார்க்க.
தண்டல் காசில் பார்க்கப்பட்ட
தண்டமிழ்ப் படங்கள்
அவை.
*தண்டமிழ் : தண்ணிய தமிழ்
அப்படியா :))
You are observing everything toto…
superb…
சைவா, கனிமொழி : வாசிப்பிற்கு நன்றிங்க.