நூறு டெசிபெல் இரைச்சல்
இசையல்ல
கேடில்லாத வெண்புகை
எரிச்சலல்ல
அன்னமிடுமிடத்தில் பரபரப்பு
ஆந்திரா மெஸ்ஸல்ல
திசையற்றுத் தெறிக்கும் கூட்டம்
கலவரமல்ல
தோல் பிளக்கும் வெளிச்சம்
படப்பிடிப்பல்ல
வண்டி நிறுத்தம் கிடைக்காது
தியேட்டரல்ல
இவையனைத்தையும் ஒருங்கே
தொகுத்து வழங்கப்படும்
நிகழ்ச்சிக்கு
ரிசப்ஷன் என்று பெயர்.
Nice…
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி கனிமொழி.
நல்லா இருக்குங்க…
hahaha paavam manamakkal
வெங்கட், பத்மா : வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப நன்றி.