ஆயிரம் கைகள்
மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை..
என்ற பாடலுடன்
மாலை முதல் காட்சிக்கான
அழைப்பு ஆரம்பித்துவிடும்
I கிளாஸ் இரும்புச்சேரும்,
4 இடைவேளையும்,
கோணி படுதாவும்,
பனைமரத்தூண்களும்,
நின்று கை தூக்கினால்
கையில் படும் வண்ண ஒளியும்,
ஒட்டுப்போட்ட வெள்ளித்திரையும்,
மழை பெய்தால்
“இன்று போய் நாளை வா”
என்று டிக்கெட்டிலெழுதும்
பெருந்தன்மையுடனிருந்த
கந்தன் டாக்கீஸ்
இப்போது
ஆயிரம் கைகள்
மறைத்து நின்றாலும்
மறைக்க முடியாத
காலி மைதானமாக.
டூரிங் டாக்கீஸை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சைவா.
ரப் நோட்டுலையே இப்படி எழுதிரீன்களே..
அய்யயோ…
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி பிரகாஷ்.
அருமை .
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி ஸ்ரீ.