ஏதோ ஒரு புதன்கிழமை
எதேச்சையாய்
திரும்பிய ஆன்டெனாவால்
இலங்கையின்
ரூபவாஹினி டிவி
தெரிந்த சந்தோஷத்தில்
நாங்களிருக்க
பத்தாததற்கு
அதே கண்கள் தமிழ்
படமும் வந்தது
புள்ளி புள்ளியாகத்
தெரிந்தாலும் பரவாயில்லை,
வந்த வரை லாபமென்று
பார்த்து முடித்தோம்
ஞாயிறு வரும்போது
கூடுதலாகப் பத்து காசு
கொண்டுவருமாறு
சொன்னதை கவனிக்காமல்
ஓடியாந்தோம்.
ரூபவாஹினி
Published inகவிதை
சூப்பர்.:-)))))
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி ஸ்ரீ.
ஆமாம், அது ஒரு அருமையான காலம்னு சொல்லத் தோணுது.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி ஷஃபி