பெரிய மீசையும்,
பொட்டும் வைத்து
ஆவேசம் வந்து
அருள் சொல்பவன் தான்
சுருட்டு கேட்டு
சினேகமாய் சிரிப்பவன்தான்
சன்னதியுள்ளே போக
மட்டும் தயங்கினான்
புதுசாய் ஏதும் சொல்லி
பயமுறுத்துவானோயென்று
யோசித்தபடி கேட்டதற்கு
சொன்னான்..
“போன வாரம்
மழை பேஞ்சதுலேர்ந்தே
செவுரெல்லாம் எர்த்தடிக்குது,
அதான்.. “
பூசாலியின் தயக்கம்
Published inகவிதை
ரொம்ப யதார்த்தமாய் இருக்குங்க…நல்லா இருக்கு
:-))))))))))))))))))).
fantastic! கலக்குங்க..

வெங்கட்,ஸ்ரீ, பா.ரா. : வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப நன்றி.