Skip to content

ப‌னித்திரை

மின்த‌டையில்லையென‌
ட்ரான்ஸ்ஃபார்ம‌ர் வேலைக்கு வ‌ரும்
எல்ப்ப‌ரிட‌ம் உறுதிசெய்வோம்

ம‌ணிக்கொருமுறை
மேக‌ம் ம‌றைக்காத‌
ந‌ட்ச‌த்திர‌ம் இருக்கிற‌தா
என்று ச‌ரி பார்ப்போம்

இந்த‌ப் ப‌ட‌மாம்
அந்த‌ப் ப‌ட‌மாம் என்று
நாங்க‌ளே பந்த‌ய‌ம்
க‌ட்டிக்கொள்வோம்

ந‌ல்ல‌தோ, கெட்ட‌தோ,
விடிய‌ விடிய‌
வி.ஸி.ஆர். வைத்து
தெருவில் ப‌ட‌ம்
போட்ட‌ கால‌ங்க‌ளில்.

Published inக‌விதை

4 Comments

  1. ஞாபகம் இருக்குது…போட்டி போட்டு முதல் வரிசையில் இடம் போட்டது…திரைக்கு பின்னால் சென்று படம் பார்க்க முயற்சித்தது…

  2. அது ஒரு நிலா காலம்?

  3. செந்தில்நாத‌ன் ‍: 80க‌ளில் ரொம்ப‌ பொதுவான‌ அம்ச‌மாச்சே இது. வ‌ருகைக்கு ந‌ன்றி.

    வெங்க‌ட் : கொஞ்ச‌ம் திருத்திக்க‌றேன்..அதுவும் ஒரு நிலாக் கால‌ம் :)

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: