ஒரு செருப்பு தைக்கப்படும்போது
இன்னொரு செருப்போடு காத்திருந்தது
மளிகைக் கடைக்குப் போன் போட்டு
சொந்தத்தோடு பேசியது
‘மொதோ’ பஸ்ஸுக்காக
பனியில் காத்திருந்தது
அடைமழையில் பைக்கில்
போனது
கழன்ற சைக்கிள் செயினை
சாலையோரம் நின்று
சரி செய்தது
தண்ணீர் குடித்து, சிரித்துப்
புரையேறியது
இவையாவும் நினைவிலிருந்து
மெல்ல மெல்ல
நழுவுகிறது
கடற்கரையில்
திரும்பிப் போகும் அலையால்,
காலின் அடியில் மணல்
அரித்துச் செல்லப்படுவதைப்போல.
Be First to Comment