காலில்லாத நூலகருக்கு
உதவியாக இருப்போம்
வாரமலர் குறுக்கெழுத்து
சேர்ந்து எழுதுவோம்
யாருக்கும் அனுமதியில்லாத
அட்லஸ் புத்தகம்
பார்ப்போம்
சில சமயம் நட்பாகவும்
சில சமயம் கோபமாகவும்
இருப்பார்
இருந்தும் அந்த நட்பு
தொடர்ந்துகொண்டிருந்தது
பிய்ந்து போன
நூலகப்பதிவேட்டில்
கட்டிய
பென்ஸிலைப்போல்.
eliya nadai…yethartham..vazhthukkal
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி ரஹ்மான்.
காலில்லாத நூலகருக்கு
உதவியாக இருப்போம்
யாருக்கும் அனுமதியில்லாத
அட்லஸ் புத்தகம்
பார்ப்போம்
சில சமயம் நட்பாகவும்
சில சமயம் கோபமாகவும்
இருப்பார்
என்னங்க இது என் சின்ன வயசில் நடந்ததைப் போலவே இருக்கிறது, வாரமலர் குறுக்கெழுத்து நாங்கள் இனைந்து செய்யவில்லை, ஆனால் அவரிடம் சாவி வாங்கித் திறப்பது, புது புத்தகங்களுக்கு நூலக முத்திரை குத்துவது, சென்ற வார குமுதத்தை வீட்டுக்கு தூக்கிச் செல்வது, சிறுவர், வார மலர், அம்புலிமாமா இவற்றை முதல்முதல் வாசிக்கும் உரிமை என எல்லாம் நன்றாக இருக்கும் ஒரிருநாள் அவர் காட்டும் கோபம் தவிர..