Skip to content

க‌ட‌லை நேர‌ம்

க‌ட‌லை நேர‌ம்
ப‌ண்ப‌லை நிக‌ழ்ச்சிக்கு
தொலைபேசி
அழைப்பு வ‌ந்த‌து


ப‌ழ‌கிய‌ பெண்
மாசமாகிவிட்ட‌தாக‌வும்
கருவை
என்ன‌ செய்வ‌தென்று
தெரியாம‌ல்
குழ‌ம்புவ‌தாக‌வும்
சொன்னானொருவ‌ன்


கலவரமாகி அழைப்பைத்
துண்டித்த அந்த
இள‌ம் தொகுப்பாளினி
அடுத்த‌ பாட்டை
ஒலிப‌ர‌ப்பினாள்


யாருக்கும் டெடிகேட்
செய்யாம‌ல்.

Published inக‌விதை

8 Comments

  1. நல்லா இருக்கு,

  2. ந‌ன்றி வெங்க‌ட்.

  3. எல்லா கவிதைகளையும் ஒரே மூச்சில் வாசித்தேன்.

    great!

    cinimatographer செழியன்?

    இவர் சிவகங்கையா?உங்களுக்கு அறிமுகம் உண்டா?ஆம் எனில் தொடர்பு கொள்ள இயலுமா?

    rajaram.b.krishnan@gmail.com

  4. எங்கைய்யா இருந்தீங்க இம்புட்டு நாளும்?
    அற்புதமான கவிதைகள்

  5. தாம‌த‌மான‌ ப‌திலுக்கு ம‌ன்னிக்க‌வும். ரொம்ப‌ ந‌ன்றி பா.ராஜாராம். செழிய‌னைத் தெரியாது, அவ‌ரின் சினிமா எழுத்து ப‌ரிச்ச‌ய‌ம் அவ்வ‌ள‌வுதான்.. க‌விதைக்கு முழுக்கார‌ண‌ம் நா.முத்துக்குமார், யுக‌பார‌தி ம‌ற்றும் முகுந்த் நாக‌ராஜ‌னின் எழுத்துக்க‌ள் தான். த‌மிழ்ம‌ண‌ விருது வாங்கிய‌ உங்க‌ள் வ‌ருகைக்கும், ர‌சிப்பிற்கும் ரொம்ப‌ ந‌ன்றி சார்.

  6. வ‌ருகைக்கும், வாசிப்பிற்கும் ரொம்ப‌ ந‌ன்றி நேச‌மித்ர‌ன்.

  7. வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ந‌ன்றி, ட‌ம்பி மேவீ.. ச‌ரி செய்துகொள்கிறேன்.

%d bloggers like this: