எப்போதுமே வராத
செட்டியார்
ஞாயிறு தூர்தர்ஷனில்
ராஜா ராணி படம்
போட்டபோது
மட்டும் வந்தார்
பத்மினியுடன்
திரும்பி நின்று
பேசிய நபர்
தான் தானென்றார்
தன் முதுகைப் பார்த்த
திருப்தியோடு
எழுந்துவிட்டார்
நாங்கள் அருவியில்
பெண் குளிக்கும்
சோப்பு விளம்பரத்துக்காக
காத்திருந்தோம்.
Be First to Comment