வண்டிகளை
வேடிக்கை பார்ப்பது
எங்கள் வேலை
பாட்டுடன் போன
பிரபாகரன் பஸ்ஸின் பின்னால்
காஷன் : ஏர் ப்ரேக்
என்று எழுதியிருந்தது
என்னவா இருக்கும்
என்பது புரியவில்லை
சொல்லவும் ஆளில்லை
பல வண்டிகள் பார்த்து
நாங்களே முடிவு செய்தோம்
அப்படி எழுதியிருந்தா
உள்ளே பாட்டு
போடுவார்கள் என்று அர்த்தம்.
காஷன் : ஏர் ப்ரேக்
Published inகவிதை
Be First to Comment