வாழப்பந்தல்
போய்வருவோம்
ஆரணியாற்றில்
ஆட்டம் இருக்கும்
பெரிய பெரிய முனிகள்
பின்னே ஐஸ்பாய்
இருக்கும்
பால்சோறு
விருந்தும் இருக்கும்
அம்மன் முகம்கூட
தெரியாத இருட்டில்
விபூதி தீற்றப்படும்
மாலை
வேனில் திரும்புவோம்
ரத்த சகதியாக சில
வீரர்கள்
தூக்கிச்செல்லப்படுவதை
பார்த்தபடி.
> ரத்த சகதியாக சில
> வீரர்கள்
கொம்புடைந்த மாடுகளையும் சேர்த்திருக்கலாம்.
நன்றி கணேஷ்.