Skip to content

அதே சிரிப்போடு

மழையால் மந்தமான வியாபாரம்,
பெயிலான பெரிய மகனின் படிப்பு,
மனைவியின் பார்வைக்குறைவிற்கான‌
சிகிச்சை,
கடையை எடுக்கச் சொன்ன‌
நகராட்சி நோட்டீஸ்,
இவையனைத்தையும்
சாதாரணமாக சொல்லிக்
கடந்துவிடுவார்..
மார்க்கெட் சாலையில்
செருப்புக்கடை போடும் பாய்
தலையில் கர்ச்சீப்பும்,
மாறாத சிரிப்போடு

“வாப்பாவுக்கு நெஞ்சு வலி,
பெரியாஸ்பித்திரில இருக்காப்ள,
இப்பம் நாந்தான்
கடை போடறண்ணே”

சின்ன மகன் சொன்னான்
அதே சிரிப்போடு.

Published inக‌விதை

One Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: