ஒரு கல்யாணத்தில்..
மாதக்கணக்கில் மடித்து
பழுப்பேறிய பட்டு வேஷ்டி,
ரசகற்பூர வாசனையோடிருக்கும்
கட்டம் போட்ட சட்டை,
ஓடாத ரேடோ கைக்கடிகாரம்,
பவழம் தேய்ந்து நூல் சுற்றிய
மோதிரமும்,
எம்சிஆர் செருப்புடன்
கடைசி வரிசையில்
தனியாக உட்கார்ந்திருந்த
அப்பா
சங்கு சத்தம் பிடிக்காமல்,
ஓல்டேய்ன், ரைய்ய் சத்தமில்லாமல்,
மல்லி, அரிசி முறுக்கு விற்காமல்,
கோரைப்பாய் கட்டு ஏற்றாமல்,
எல்லா பஸ்ஸும் புறக்கணித்தே
செல்லும்
பழைய பஸ் ஸ்டாண்ட்
போலவே தெரிந்தார் !
Be First to Comment