Skip to content

முரண்

குட்டிக் கிண்ணத்தில்

தண்ணீர் வைத்தார்

குடிக்க‌


சின்ன சின்ன‌

சப்போட்டா பழம் குடுத்தார்

சாப்பிட‌


ஒரு விரல் நீட்டி

நாலு விரல் கால்கள்

பற்றி வெளியே

எடுத்து ஏதோ பேசினார்,

பச்சைக்கிளியிடம்


பெரிய கத்திரி எடுத்து

மெதுவாக வெட்டினார்

சற்றே நீண்ட‌

சிறகுகளை


காலில்லாத

மரத்தடி

ஜோசியர்.

Published inUncategorized

One Comment

  1. விமர்சகன் விமர்சகன்

    இது என் முரண் ? அந்த ஜோசியர்ய்க்கு கால் இல்லை.
    அவனுக்கு கீழே வேலை செஈய்ம் பறவைக்கு இறகு வெட்டுவது ஏன் முரண் ?

%d bloggers like this: