வேறு கண்ணாடி மாற்றுவது,
ஷிர்டிக்கு போக நினைப்பது,
யாரும் தன்னைப் பார்க்க
வராமல் இருப்பதெல்லாம் பற்றி
ஸ்கூல் பேக் மாட்டிய
பாட்டிக்கும்,
இது எதுவும் கேட்காமல்..
உள்ளங்கையில் பெயிண்ட்
வைத்து பேப்பரில் பதித்தது,
நவீனுக்குப் பல் விழுந்தது,
மிஸ் தன் கையில் ஸ்மைலி
வரைந்தது,
ஸ்பைடர்மேன் பற்றியெல்லாம்
தலை கலைந்த
எல்.கே.ஜி. சிறுமிக்குமான
உரையாடல்..
சேர்ந்தே நடந்தும்
சேராமல் இருக்கும்
தண்டவாளங்கள்
போலவே !
Be First to Comment