எல்லாம் நன்றாகப் போன
காலத்தில்
3 தொழிற்சங்கங்களின்
பூஜைகள்,
மாலைகள்,
வேண்டுதல்கள்,
காணிக்கைகள்,
ஆயுத பூஜை, சதுர்த்தியென
கலகலப்பான
காலங்களை எண்ணியும்
தற்போது மூடிய
தொழிற்சாலை வெறும்
பஸ் ஸ்டாப்பானதும்,
பழைய தொழிலாளிகள்
ஆட்டோ ஒட்டிப்போகும்போது
கண்டுகொள்ளாததும் பற்றி
வருந்துவதில்லை
எல்லாம் நன்றாகப் போன
காலத்தில்
தொழிற்சாலை வாசலில்
இருந்த
அதே பிள்ளையார் !
Be First to Comment