Skip to content

நீர் விளக்கு

வெறும் வாழைமட்டையில்
விளக்கு வைத்து
ஆற்று நீரில் அனுப்பி,
கையெடுத்துக் கும்பிட்டுத்
திரும்பிடுகின்றனர்,
செருப்பு டோக்கன்
தேடியபடி..
காற்றடிக்குமா,
ஆடும் நீர்
சாய்த்துவிடுமா,
மட்டை நகர்ந்துவிடுமா
என்கிற கவலை
இல்லாமல்
மாற்றலான புது ஊரில்,
வேறு புதிய பள்ளியில்
மகளை
விட்டும் திரும்பும்
பெற்றவர்களைப் போலவே !

 

Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: