அந்நியக் குளிரில் அலாரம்
அடித்தது மறந்து,
ஷேவிங் ஃபோமோடு அரிசியை
ஓவனில் வைத்து,
குளித்துக்கொண்டே பல் தேய்த்து,
பெல்ட் மாட்டியபடி பிரட்டை சுட்டு,
வேகாத சோற்றில்
பொடியும் கலந்து,
லேப்டாப்போடு நடந்துகொண்டே
ஓடும்போது..
சாய்ந்து, காலாட்டி,
இசையருவியில் பாட்டோடு,
வெள்ளி மலர் படித்தபடி
” இன்னைக்கும் அதே
தோசை தானா”
என்கிற சலிப்பான
என் குரல்..
எனக்கே கேட்டது,
வெகு தூரத்தில் !
Be First to Comment