ரெண்டாம் மாசம் நாள் தள்ளி
மூணாம் மாசம் நீர் டெஸ்ட் எடுத்து
நாலாம் மாசம் நிறைய தண்ணி
குடிச்சு ஸ்கேன் செஞ்சி
அஞ்சாம் மாசம் துப்பட்டாவை
முன்னாடி போட்டு
ஆறாம் மாசம் அசையறது தெரிஞ்சி
ஏழாம் மாசம் நிறைய வளையல் போட்டு
பூ முடிச்சி
எட்டாம் மாசம் கேக்கறவங்களுக்கு
மாளாம பதில் சொல்லி
ஒம்பதாம் மாசம் ஒருக்களிச்சு
தூங்காம பதறி,
செயின் கழட்டி, வெறும் கயிறு கட்டி
தின்னூரு பூசி, படாத பாடு பட்டு
மூச்சு முட்டி,
ரத்தமும் சதையுமா
கொடி பிரிஞ்சி
நான் பெத்த
என் உயிரை..
“பொண்ணா ?” ன்னு
கேக்கறவங்கள
பொலி போட்டாத்தான்
என்ன ?
Be First to Comment