எப்போதோ குற்றாலம் டூர்
போன ஃபோட்டோ
கிடைத்தது
ஃபோனிலும் நேரிலும்
இன்னும் தொடர்பில்,
வேர் பிடித்து
ஆழமாய்.. சிலர்.
காணாமல்
போயிருந்தனர்,
காற்றில் மறைந்த
கேஸ் பலூன்களாய்.. பலர்.
யாரோடும் கலக்காமல்,
நெடுஞ்சாலையில் தனியே
கிடக்கும்
தொப்பியாய் நான் !
Be First to Comment